ஊழியர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை திரும்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கத்தினர் தருமபுரி, சேலம் மாவட் டங்களில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களின் நலனுக்காக போராடியஅரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் 32 ஆண்டுகால அரசுபணியில் நேர் மையாகவும் நல்லமுறையில் பணி யாற்றியவர். மேலும் அரசு ஊழி யர் ஆசிரியர்களின் போராட்ட மேடையான ஜாக்டோ- ஜியோ அமைப்பினை ஒருங்கிணைத்து பலகட்ட போராட்டத்தை நடத் தினர். இவரை அரசுப்பணியில் ஓய்வுபெறும் நாளில் அரசாணை கள் மற்றும் நீதிமன்ற தீர்ப் பாணைக்கு முரணாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்செயலை வன்மையாக கண்டித்து தற்காலிக பணிநீக் கத்தை திரும்பப்பெற தமிழக அரசு வலியுறுத்தியும் செவ்வாயன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, தரும புரி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யில் முன்னாள் மாவட்ட செயலா ளர் சா.இளங்குமரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமஜெயம், பென்னாகரத்தில் வட்ட கிளை தலைவர் நீலமேகம், மொரப்பூரில் வட்ட கிளைதலை வர் ஜோதிகனேசன், அரூரில் மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கோபிநாத், பாலக்கோட்டில் மாவட்ட பொரு ளாளர் சர்வோத்தமன், காரி மங்கலத்தில் மாவட்ட தலைவர் ரூத்ரையன், நல்லம்பள்ளியில் வட்டகிளை தலைவர் ராஜேஸ்வரி,பாப்பிரெட்டிப்பட்டியில் வட்ட கிளை தலைவர் நீலமேகம் ஆகியோர் தலைமையில் உள் ளிருப்பு போராட்டம் நடை பெற்றது.