திருப்பூர், செப். 18 – மத்திய, மாநில அரசுகளால் இறுதிப் படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மொத்த நிதி மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விபரங்களைத் தெரிவிக்குமாறு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் புதன்கிழமை மாந கராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு எழு தியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ள விபரம் வருமாறு: ஸ்மார்ட் சிட்டி எனப் படும் சீர்மிகு நகரத் திட்டம் குறித்து மக் கள் பிரதிநிதி என்ற முறையில் என்னி டம் மக்கள் பல்வேறு வினாக்கள் கேட் கின்றனர். இது குறித்து முழுமையான அதி காரப்பூர்வமாக அறிந்து கொள்ள விரும்பு கிறேன். இத்திட்டத்திற்கான முழு மொத்த நிதி மதிப்பீடு, முதல் கட்டமாக எந்தெந்த திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும். அவை எந்தெந்த பகுதியில் நிறைவேற்றப் பட்டு வருகின்றன, எப்போது முடியும், இன்னும் தொடங்கப்படாமல் நிலுவை யில் உள்ள திட்டங்கள் எவை, அவை எப்போது தொடங்கப்படும், மொத்த திட் டப்பணிகளை நிறைவேற்றி முடிக்க எவ்வளவு காலம் வரையறுக்கப்பட்டுள் ளது, பணிகள் தரம் எவ்வாறு கண்காணிக் கப்படுகிறது, இப்பணிகளுக்கு திறந்தவெளி டெண்டர் விடப்பட்டுள்ளதா, டவுன்ஹால் அருகில் உள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு பெரும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதை இடிப்பதற்கு எந்த மட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, தோண்டி எடுக்கப்பட்ட மண் எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது, மக்கள் பயன்பாட்டில் உள்ள பள்ளிக்கூடம் உட்பட முக்கிய கட்டிடங்கள் தேவையில் லாமல் இடிக்கப்படுவதாக தகவல் வந்துள் ளன. எந்தெந்த கட்டிடங்கள் இடிக்கப்படு கின்றன. நீண்ட காலம் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் பல குடியிருப்பு களை காலி செய்ய அரசு அதிகாரிகள் நிர்பந்தித்து வருவதாக புகார் தெரிவிக்கப் படுகிறது. எந்தெந்த இடங்களில் மக்கள் குடியிருப்புகள் காலி செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற விபரங்களை முழுமை யாக வழங்குமாறு கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.