திருப்பூர், பிப். 8 – திருப்பூர் மாவட்ட அளவிலான திசா (டிஐஎஸ்எச்ஏ) கூட்டத்தில் விரிவாக பரிசீலனை செய்யாமல் திருப்பூர் தினசரி மார்க்கெட்டை இடிக்கக் கூடாது என்று கே.சுப்ப ராயன் எம்.பி. கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணை யர் க.சிவக்குமாருக்கு திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: சனிக்கிழமை வெளிவந்த நாளிதழிலில் ஆணையர் பேட்டி வெளியாகியுள்ளது. இதில் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள தினசரி மார்க்கெட் குறித்து குறிப்பிட்டுள்ள விவரத்தில் “எனக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய தக வல்களும், துறைரீதியான நடவ டிக்கை, விதிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதில் அவரும் திருப்தி அடைந்துவிட் டார்.” என்று உண்மைக்கு மாறான தகவல்களை ஆணையர் வெளியிட் டுள்ளார். இதை நான் கடுமையாக மறுக்கிறேன். எந்தக்கட்டத்திலும் எந்த மட்டத்திலும் இது நடக்க வில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற்ற திசா கூட் டத்தில் ஏற்கெனவே உள்ள மார்க் கெட் வியாபாரிகளுக்கும் கட்டி டங்கள் புனரமைத்து மீண்டும் அவர்களுக்கே அதே கடைகள் ஒதுக்கப்படும். அதற்குரிய எழுத் துப்பூர்வமான உறுதி வழங்கப்படும் என்று ஆணையர் உறுதியளித்தார். அதற்குப் பின் நான் பலமுறை கொடுத்த கடிதத்திலும் அதை சுட்டிக்காட்டி உள்ளேன். அவ்வாறு உறுதிமொழிக் கடிதம் கொடுக்கா மல், மார்க்கெட் வியாபாரிகளை காலி செய்யக் கூடாது, கட்டிடங் களை இடிக்கக் கூடாது எனவும் அதில் வலியுறுத்தி உள்ளேன். பூ மார்க்கெட்டையும் இடித்துள் ளார்கள். ஆனால் தற்போது உண் மைக்கு மாறான செய்தியை ஆணை யர் பத்திரிகையில் பேட்டி கொடுத் துள்ளார். இதன் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டிவரும் என்று கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள திசா கூட்டத்தில் இதன் மீது விரிவாக பரிசீலிக்காமல் தினசரி மார்க் கெட்டை இடிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.