tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்க்க விரைந்து செயல்பட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 16 – திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமையில் உடு மலைப்பேட்டை கட்சி அலுவல கத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி உட்பட நகரம், கிராமப் புறங்களில் குடிநீர் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. பல பகுதிகளில் வாரம் ஒரு முறை, பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இன்னும் சில பகுதிகளில் மாதம்  ஒருமுறை மட்டும் குடிநீர் கிடைக்கும்  அவலநிலை உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளில் இருந்து தண்ணீர் பெற்று விநியோகம் செய்யப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் போதுமான குடிநீர்  கிடைப்பதையும், அதை பாரபட்சம்  இல்லாமல் அனைத்துப் பகுதி களுக்கும் பகிர்ந்து விநியோகம் செய்வதையும் முறைப்படுத்த வேண்டும். அதேசமயம் கிராமப் புறங்களில் ஆழ்குழாய்கள் மூலம்  கிடைக்கும் தண்ணீரை உத்தர வாதப்படுத்த வேண்டும். செயல் படாத, பழுதடைந்த ஆழ்குழாய் மோட்டார்களை பழுது நீக்கியும், தண்ணீர் வற்றிய ஆழ்குழாய்களை தூர்வாரி ஆழப்படுத்தியும், தேவைப்படும் இடங்களில் புதிய ஆழ்குழாய்களை போர்க்கால அடிப்படையில் அமைத்தும் தண்ணீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நகரப்பகுதிகளில் குப்பை அகற்றுவதிலும் விரைந்து செயல்பட்டு நோய் தொற்று அபா யத்தை போக்கி சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்து வரி உயர்வு
திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு வீடுகள், வணிக கட்டிடங் களுக்கு சொத்து வரியை உயர்த்து வதாக அதிகாரிகள் மேற்கொண்ட தன்னிச்சை நடவடிக்கை காரண மாக இரண்டு, மூன்று விதமான வரி நிர்ணயிக்கப்பட்ட குளறுபடி உள்ளது. இதிலும் குறிப்பாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி இனங்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாதபடி பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிலருக்கு பல மடங்கு வரைகூட வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து மதிப்புக்கு சம்பந்தமின்றி உயர்த்தப்பட்ட இந்த வரி உயர்வை  ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியாது என்றும், கணிப் பொறியில் பதிவேற்றம் செய்து விட்டதால் மாற்ற முடியாது என்றும் கூறும் அதிகாரிகள் உயர்த்தப்பட்ட வரியை கட்ட வேண்டும் என்றும்  கட்டாயப்படுத்தினர். இந்த அநியாய வரி உயர்வை ரத்து செய்ய  மார்க்சிஸ்ட் கட்சி பல கட்டப் போராட்டங்களை மக்களைத் திரட்டி நடத்தி உள்ளது. எனவே தற்போது இந்த அபரிமித வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்திடுக
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகங்கள் இல்லாத நிலையில், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சிஅமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு  செய்ய வேண்டும். புதிய உள் ளாட்சி நிர்வாகம் பொறுப் பேற்ற பிறகு சொத்து வரிப்  பிரச்சனையில் முடிவு செய்ய வேண்டும். அதுவரை பழைய நிலையிலேயே சொத்து வரி விதிப்புத் தொடர்வதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உத்தர வாதம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.