திருப்பூர், ஜூலை 27- திருப்பூர் மாவட்டத்திற்கு தனியாக புதிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தக வல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கான நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் மண்டல அலுவலகம், திருப்பூரில் கடந்த 14 ஆம் தேதி வரை செயல்பட்டு வந்தது.
நில உப யோக மாற்றம், வீட்டுமனைப் பிரிவு மற்றும் கட்டி டங்களுக்கான தொழில்நுட்ப அனுமதி, திட்ட அனு மதி பெற வேண்டுமாயின் இவ்விரு மாவட்ட மக்க ளும் திருப்பூர் மண்டல அலுவலகத்தில் விண்ணப் பித்து பயனடைந்து வந்தனர். தற்போது திருப்பூர் மண்டல அலுவலகம் மற்றும் திருப்பூர் உள்ளூர் திட்டக் குழும அலுவலகம் ஒன்றாக இணைக்கப் பட்டு புதிய தனித்த திருப்பூர் மாவட்ட நகர் ஊர மைப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு ஜூலை 15 முதல் செயல்பட்டு வருகிறது.
எனவே திருப்பூர் மாவட்டத்தினர் நில உபயோக மாற்றம், வீட்டு மனைப் பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெறுவதற்கு இவ்வலுவலகத்தில் விண் ணப்பித்து பயன் பெறலாம் என அவர் தெரிவித்துள் ளார்.