திருப்பூர், பிப். 16 – கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர் அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலா ளர்களுக்கும் வேலை வழங்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்ட சிறப்புப் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பெரு மாநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட் டத் துணைச் செயலாளர் ஏ.சண் முகம் தலைமையில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கக் கிளை நிர் வாகி சீனிவாசன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.டி.கோதண்டன் இந்த பேரவையைத் தொடக்கி வைத் துப் பேசினார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், மாவட்டப் பொருளாளர் ஆர்.மணி யன் ஆகியோர் இம்மாவட்டத்தில் கிராமப்புற வேலை உறுதித் திட் டத்தில் பணியாற்றும் தொழிலா ளர்களின் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஒன்றியம், பொங்கலூர், காங்கேயம், ஊத்துக் குளி, அவிநாசி ஆகிய ஒன்றியங் களில் இருந்து வந்திருந்த தொழி லாளர்கள் தங்கள் வேலை மற்றும் ஊர்களின் அடிப்படைப் பிரச்ச னைகள் குறித்து விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்த னர். இதையடுத்து இப்பேரவை யில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தற்போது வழங்கி வரும் வேலை நாட்கள் எண்ணிக் கையை 250 நாட்களாக அதிக ரிப்பதுடன், தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்கவேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங் கும் வகையில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்திற்கு மத்திய அரசு தற்போதைய பட்ஜெட் டில் ஒதுக்கியுள்ள நிதி போதுமான தாக இல்லை. எனவே கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். இத்திட் டத்தில் சமூகத் தணிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த வீடு, இடம் இல்லாத கிராமப்புற ஏழை மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 3 சென்ட் இடம் வழங்கிட வேண்டும். 60 வயது பூர்த்தியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கோரிக் கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி மார்ச் 10ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட் டத்தை நடத்துவது என்றும் இப்பேரவையில் தீர்மானிக்கப் பட்டது. பேரவையின் நிறைவாக மாநி லத் துணைத் தலைவர் சி.துரை சாமி நிறைவுரை ஆற்றினார். முன் னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.பழனிசாமி, பொங்கு பாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் எஸ்.அப்பு சாமி, பெருமாநல்லூர் கட்சிக் கிளைச் செயலாளர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, பி.கே.கருப்பசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதில் கிராமப் புறங்களைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளர்கள், பெண் கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். பேர வையின் முடிவில் ஓய்வூதியர் சங் கத் தலைவர் பெருமாநல்லூர் க.சண்முகம் நன்றி கூறினார்.