tamilnadu

img

எஸ் பேங்க் நிலையைப் பார்த்தால் தேசியமய வங்கிகளே உகந்தது வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி பேச்சு

திருப்பூர், மார்ச் 9 – எஸ் பேங்கின் நிலையைப் பார்த் தால் நம் நாட்டுக்கு தேசியமய வங்கி களே உகந்தது என்பதை அறிய முடி கிறது என்று அனைத்திந்திய தேசிய மய வங்கி அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன் கூறி னார். திருப்பூர் மண்டல கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் இளை ஞர் விழா மற்றும் உலகப் பெண்கள் தினம் ஞாயிறன்று திருப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய தேசியமயமாக்கப் பட்ட வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.வி.மணி மாறன் பங்கேற்று வங்கித் துறையின் எதிர்காலம் குறித்து விவரித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் 2019இல் ஊதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இரு தரப்பு வங்கி ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை தவறானது. தனியார் மயம் ஆக்குவதன் முதல்கட்டம்தான் இந்த வங்கிகள் இணைப்பு நடவ டிக்கை ஆகும். எஸ் பேங்க்கின் சமீ பத்திய நிலையைப் பார்த்தால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே நம் நாட் டுக்கு உகந்தவை என்பது உறுதி யாகிறது என்று கூறினார். இளைஞர் விழாவுக்கான ஏற்பாடு களை கனரா வங்கி அதிகாரிகள் சங்க திருப்பூர் மண்டலச் செயலாளர் மனோஜ் சுந்தரமும், பெண்கள் தின விழாவுக்கான ஏற்பாடுகளை மீனாட் சியும் செய்திருந்தனர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.