திருப்பூர், செப். 7 – பனியன் தொழிற்சாலையில் புகுந்து வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்தி தொழிலாளர் களைத் தாக்கிய இந்து முன்னணி சமூக விரோதிகளுக்கு அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கண் டனம் தெரிவித்துள்ளன. அத்து டன் இதைக் கண்டித்து அனைத்து கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத் திலும் தொழிற்சங்கங்கள் பங் கேற்பதாக அறிவித்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத் தில் சனியன்று அனைத்து பனி யன் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் சிஐடியு பனி யன் தொழிலாளர் சங்கத் தலை வர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏஐடி யுசி சார்பில் என்.சேகர், ஏ.ஜெக நாதன், ஆர்.செந்தில்குமார், சிஐடியு சார்பில் ஜி.சம்பத், ஆ.ஈஸ் வரமூர்த்தி, எல்பிஎப் சார்பில் க.ராமகிருஷ்ணன், சு.பூபதி, ஐஎன்டியுசி சார்பில் ஏ.சிவசாமி, எம்எல்எப் சார்பில் மு.மனோகரன் ரன், எல்.பெருமாள், எச்எம்எஸ் சார்பில் ஆர்.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் நகரம் லட்சக்கணக் கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் நகரமா கும். பல மாநிலங்களில் இருந்து திருப்பூரில் குடியேறி இருந்தாலும் அமைதியான தொழில் நகரமாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலங் களில் திருப்பூரின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வரு கின்றன. குறிப்பாக இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூர் முழுவதும் கட்டாய வசூ லில் ஈடுபடுவதும், அவ்வப்போது சிறு, சிறு சம்பவங்கள் நடப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகி றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் முதலிபாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பணம் தர வில்லை என்பதால் கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற் போது கடந்த செப். 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பணம் தரவில்லை என்பதால் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கேரிபாளை யத்தில் உள்ள வி.கே.கார்மெண்ட்ஸ் கம்பெனிக்குள் புகுந்து கம்பெனி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள னர். இத்தாக்குதலுக்கு அனைத்து பனியன் சங்கங்கள் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய தாக்குதல் சம்ப வம் பணம் பறிப்பதுடன், ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சுறுத் தும் நடவடிக்கையும் ஆகும். இத்தகைய போக்கு திருப்பூரின் தொழிலையும், அமைதியையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பனியன் தொழிற்சங் கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இச்சம்பவத்தைக் கண்டித்து செப்டம்பர் 9ஆம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பனி யன் தொழிற்சங்கங்களும் பங் கேற்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.