தாராபுரம், நவ. 2 - தாராபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்ததையடுத்து நெல்நடவு பணியில் விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர். தாராபுரம் பகுதியில் புதிய அமராவதி பாசனத்தில் 9 ஆயிரத்து 800 ஏக்கரும், பழைய அமராவதி பாசனத்தில் 8 ஆயிரத்து 300 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இரு பாசன பகுதிகளிலும் அமராவதி அணை யில் தண்ணீர் இருப்பு போதிய அளவு இருந்த காலங்களில் இருபோகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே செய்து வருகின் றனர். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், தாராபுரம் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் தாராபுரம் பகுதி விவ சாயிகளின் நீராதாரமான அமராவதி அணை நிரம்பி வருகிறது. இதையடுத்து புதிய மற்றும் பழைய வாய்க்கால்களில் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகளும் நெல் நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் முழுக்கொள்ள ளவான 90 அடியை எட்டும் என விவசாயி கள் நம்பிக்கையுடன் உள்ளனர். பொதுப் பணித்துறையினர் தகுந்த நீர் மேலாண் மையை மேற்கொண்டு, ஒருபோக நெல் சாகுபடியை அறுவடை வரை, சீராக வாய்க் கால்களில் தேவைக்கேற்ப திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.