tamilnadu

சேவூரில் ரூ.5.20 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன. 14- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.5.20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 268 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,120 முதல் ரூ.5,310 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,760 முதல் ரூ.4,980 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,480 முதல் ரூ.4,700 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5.20 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது. இதில் 4 வியாபாரிகள், 21 விவசாயிகள் பங்கேற்றனர்.