திருப்பூர், அக். 8- தாராபுரத்தில் உயர் மின்கோபுர எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதனன்று நடைபெற உள்ளது. உயர் மின்கோபுர எதிர்ப்பு கூட்டியக்கத்தின் தலைவர்கள் வழக்கறிஞர் ஈசன், முத்து விசுவநாதன், சண்முகசுந்தரம், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகி யோர் கடந்த செப். 13 கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாராபுரம் பார்க் ரோடு (கோர்ட் அருகில்) வர்த்தகர் கழக திருமண மண்டபத்தில் கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்மு கம் மற்றும் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அக். 9 ஆம் தேதி ( புதன்கிழமை) முற்பகல் தாராபுரம் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஆகவே, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், ஆதரவான விவசாயிகளும், பொது மக்களும் நேரில் வந்து தங்களுடைய ஆதரவினை தெரிவிக்குமாறு கூட்டியக்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.