திருப்பூர், நவ. 5 – திருப்பூர் தெற்கு உழவர் சந்தை உள்ளிட்ட தென்னம் பாளையம் சந்தையில் திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவ லர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில், வெங்காய பதுக்கலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் மற்றும் தெற்கு வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் சந்தையில் உள்ள வெங்காய மொத்த விற்பனையாளர்களைச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வெங்காய இருப்பு, வெங்காயம் கொள்முதல் செய்ததற்கான ரசீது உள்ளிட்ட விபரங்களை அவர்கள் தணிக்கை செய்தனர். 50 டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என்றும் வியாபாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தங்களிடம் சுமார் 35 டன் அளவுக்குத்தான் வெங்காயம் இருப்பு உள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.