திருப்பூர், ஆக. 8 – தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டு மென மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நொய் யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. அதன் ஒரு பகுதியாக ராயபுரம் அணை மேடு பகுதியில் உள்ள கரையோரம் வசிக் கும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள் ளியன்று வெள்ள நீர் புகுந்ததால் அதிகாரி கள் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்க ளைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி னர்.
அதேசமயம் இப்பகுதி மக்கள் கூறுகை யில், வெள்ளம் அதிகரித்து வீடுகளில் தண் ணீர் புகுந்துள்ள சூழ்நிலையில் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து மாவட்ட நிர்வா கத்தால் எந்த அறிவிப்பும் தரவில்லை. நொய் யல் ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அதிக ளவு இருப்பதால் தண்ணீர் கடந்து செல்ல முடியாமல் குடியிருப்புப் பகுதிக்குள் வருகி றது. நோய்த்தொற்று பரவி வரக்கூடிய இச் சூழ்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் நீலகிரி மற்றும் கோவையில் மழை பெய்து வருவதாலும் நொய்யல் ஆற் றில் தண்ணீர் அதிகம் வரும் வாய்ப்பு இருப்ப தாலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரை வழங்கி யுள்ளார்.