திருப்பூர், நவ.13- தமிழகத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலைத் தாமத மின்றி, உடனடியாக வெளியிடு மாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் செவ்வாயன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: டிசம்பர் மாத இறுதிக் குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில அமைச் சர்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் தொடர்பான பணிகளில் அரசு நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் விருப்ப மனுக்களை தங்கள் கட்சி யினரிடம் ஆளும் கட்சி பெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் பெண்கள், பட்டியலினத் தினர் போட்டியிடுவதற்காக ஒதுக் கீடு செய்யப்பட்ட உள்ளாட்சி இடங் கள் விபரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது. இது பற்றிய விபரங்களை அரசு நிர்வாகம் ஏற்கெனவே தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறைப்படி அரசியல் கட்சியினருக்கு இந்த விபரம் தரப் படவில்லை. அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பான முழு விபரங்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கு இந்த விபரங்களை வழங்காமல் தவிர்க்கின்றனர். அரசு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஆளும் கட்சியினருக்குச் சாதகமா னதாகவும், உள்நோக்கம் கொண்ட தாகவும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்கள் மற்றும் அர சியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இந்த இட ஒதுக்கீடு விபரங்களைத் தாம தம் செய்யாமல், உடனடியாக வெளியிட வேண்டும். இடஒதுக் கீட்டின் அடிப்படையில் தொடர் புடைய பட்டியலினத்தினர், பெண் கள் உள்ளாட்சித் தேர்தல்களில் ஜனநாயகப்பூர்வமாக பங்கேற்றி டவும், முறைப்படி நேர்மையாக இத்தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.