அவிநாசி, ஆக. 20 – அவிநாசியில் நடை பெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.18 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிர திவாரம் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத் திற்கு ஆயிரத்து 292 மூடை பருத்தி வந்திருந்தது. இதில், ஆர்.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ரூ. 4 ஆயிரத்து 100 முதல் ரூ. 4 ஆயிரத்து 825 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. ஆயிரத்து 800 முதல் ரூ. 2 ஆயிரத்து 500 வரையி லும் வியாபாரிகள் ஏலத் தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.18 லட் சத்து 12 ஆயிரம் ஆகும்.