அவிநாசி, ஜூலை 10- அவிநாசி அருகே தெக்க லூரில் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் உள்ள வீர ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, முகாமில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீரர்க ளுக்கு வெள்ளியன்று பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது. அவிநாசி அருகே தெக் கலூர் கிட்டாம்பாளையத் தில் எல்லைப் பாதுகாப்பு படை (பட்டாலியன்) முகாம் உள்ளது. இம்முகாமில் உள்ள 33 வயதான வீரர் ஒருவருக்கு சளி மாதிரி பரி சோதிக்கப்பட்டதில் அவ ருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு, சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைய டுத்து அவருடன் தொடர் பில் இருந்த 20 வீரர்களுக் கும் சேவூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பரிசோ தனை மேற்கொள்ளப்பட் டது.