tamilnadu

வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர், ஜூன் 28- திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் வங்கி ஊழியர் ஒரு வருக்கு சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதியான தையடுத்து, அவருடன் வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. காங்கேயம், ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவ ஒருவர் கோவை சாலை காடையூரில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளாராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்த நிலையில்,  கோவை  தனி யார்  மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து விட்டு,அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், சனியன்று இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவர் அழைத்துச் செல் லப்பட்டார். மேலும், இவரது மனைவி, மகன் மற்றும் வங்கி யில் இவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அனைவருக்கும் சனியன்று காங்கயம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது.  

மேலும் ராம் நகர் பகுதியில் காங்கயம் நகராட்சி சுகாதா ரப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட் டது. கொரோனா தொற்று ஏற்பட்டவர் குடியிருந்த தெரு விற்கு சீல் வைக்கப்பட்டது. இப்பகுதியில் குடியிருப்பவர்க ளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் காங் கயம்  நகராட்சி நிர்வாகம் மூலம் வாங்கிக் கொடுக்கப்படும் என நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் தெரிவித் தார்.