பல்லடம், ஜூன் 1 –பல்லடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 397 கிலோ பிளாஸ்டிக் பைகளை ஒன்றிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்லடம் ஒன்றியத்திலுள்ள கணபதிபாளையம், சித்தம்பலம், இச்சிப்பட்டி, க.அய்யம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், கரைப்புதூர், மாணிக்காபுரம், பூமலூர், ப.வடுகபாளையம்புதூர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி உள்ளிட்ட வர்த்தகக் கடைகளில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் அலுவலர் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீபா, காளீஸ்வரி, ராமச்சந்திரன், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறயினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட 397கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.