திருப்பூர், பிப். 16 – மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் பெரும்பான்மை மக்களைக் கசக்கிப் பிழியக்கூடியதாக வும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக வெள்ளகோவி லில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. வெள்ளியன்று வெள்ள கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிரான பிரச் சார இயக்கம் நடத்தப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், காங்கேயம் தாலுகா செயலாளர் திருவேங் கடசாமி, தாலுகா குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசின் பட்ஜெட்டை அம்பலப்படுத்தி உரையாற்றி னர்.
ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குடிமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் வி.தம்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.