திருப்பூர், மே 26 - திருப்பூரில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ராதா நகர் அழகர்சாமி குடியிருப்பு அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதியில் கடந்த சில தினங்க ளுக்கு முன் அதிகாலை நேரத்தில் வடக்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் ஓடியுள்ளனர். இதில் இருவர் மட்டும் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், இருவரும் திருப்பூர் கொங்கு பிரதான சாலையைச் சேர்ந்த ஈ. கபில்குமார் (20), எம்.கிருஷ்ணகுமார் (23) என்பதும், சாலையில் வரு வோரை தாக்கி கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய தும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறை யினர் அவர்களிடம் இருந்த அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இத்னைத்தொடர்ந்து தப்பியோடிய திருப்பூர் குமரா னந்தாபுரத்தை சேர்ந்த எஸ். கார்த்திக் (31), எம்.எஸ். நகரைச் சேர்ந்த எஸ். ராஜா (32), பாரப்பாளையத்தை சேர்ந்த ஜி.ராஜசேகரன் (32) ஆகிய 3 பேரை தேடி வந்த நிலை யில், சனியன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட னர்.