திருப்பூர், பிப். 18 – தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா திருப்பூ ரில் கொண்டாடப்பட்டது. நெருப்பெரிச்சல் வாலிபாளையம் கொங்கு திருமண மண்டபத்திலும், பிச்சம்பாளையம் புதூர், கேத்தம் பாளையம் தியாகி பன்னீர்செல்வம் நினைவகத்திலும் ஞாயிறன்று இவ் விழா நடத்தப்பட்டது. மேலும் இரு இடங்களிலும் புதிய கிளை அமைப்புக் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்வு களில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.காளி யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ரோஸி ஆகியோர் பங்கேற்று சங்கத் தின் செயல்பாடுகள், நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினர். அத்து டன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆ.சிகா மணி, சி.பானுமதி, மகாலிங்கம் மற் றும் கணேசன், டி.என்.மோகன், சாமி நாதன், பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புதிய கிளை நிர்வாகிகள்
வாவிபாளையம் கிளைத் தலைவர் சாமிநாதன், செயலாளர் டி.என்.மோகன், பொருளாளர் கணேசன் ஆகியோரும், பிச்சம்பாளையம் கிளைத் தலைவர் சக்திவேல், செய லாளர் வசந்தா, பெருளாளர் வனஜா ஆகியோரும் இரு கிளைகளின் புதிய’ நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப் பட்டனர். இந்த இரு நிகழ்வுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.