திருப்பத்தூர்,நவம்பர்.27- பள்ளி மாணவன் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவரின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய புகாரில் ஆசியர் விஜயகுமார் என்பவரை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.