திருப்பத்தூர், ஜூலை 30- “தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு முற்றிலுமாக திரும்பப் பெறப்பட வேண்டிய ஒன்று” என்று திருப்பத்தூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருப்பத்தூர் டீச்சர்ஸ் அகாடமி மற்றும் ஏணிப்படி ஆகிய கல்வி சார்ந்த அமைப்பு கள் ஒன்றிணைந்து தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கை நடத்தின. எழுத்தாளர் அழகிய பெரியவன், எழுத்தாளர் நீதிமணி மற்றும் அரியலூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் ப.செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கி னர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுநல ஆர்வ லர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் சென்று ஜூலை 31க்குள் அவரவர் கருத்துக்களை விரிவாகப் பதி விடுமாறு வலியுறுத்தப்பட்டது. “தேசிய கல்விக் கொள்கையின் பெரும் பான்மையான கூறுகள் ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் விரோத மாக உள்ளதால் இது திருத்தப்பட வேண்டிய ஒன்றல்ல மாறாக முற்றிலும் திரும்பப் பெறப் பட வேண்டிய ஒன்று” என்று ஒருமன தாகக் கருத்தரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஏணிப்படி அமைப்பின் அமைப்பாளர் ம.செ.மாரிமுத்து வரவேற்றார். மாணிக்க முனி ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் டீச்சர்ஸ் அகாடமி நிறுவனர் முனியாண்டி நன்றி கூறினார்.