tamilnadu

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஒரு இலட்சம் கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி, ஜூலை 9- தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்ய கோரி ஒரு இலட்சம் கையெழுத்து இயக்கம் நெல்லையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை இந்து  சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேச்சிநாதன் தலைமை தாங்கி னார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகி குமார வேல் சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி நன்றியுரை கூறினார்.