திருநெல்வேலி ஜூன் 4- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி யது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை யிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த தலையணை, தேங்காய் உருளி அருவிகளில் வரத் தொடங்கியுள்ளது. தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழு கிறது. தண்ணீர் வரத்து இருந்தாலும் சுற்றுப்பயணிகள் கொரோனா ஊரடங் கால் அங்கு செல்லமுடியாத நிலை உள்ளது.