tamilnadu

img

நெல்லை மாவட்டத்தில் 2,114 பேருக்கு வீட்டுக் கண்காணிப்பு

திருநெல்வேலி, மார்ச் 27- வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை  மாவட்டத்திற்கு வந்த 2,114 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,நெல்லை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போதைய நிலையில் நெல்லை  மாவட்டத்தில் 2,114 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.