tamilnadu

img

கூடங்குளம் முதலாவது உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது

திருநெல்வேலி:
கூடங்குளத்தில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய மற்றும் ரஷ்ய கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் இயங்கி வருகின்றன . இதன் மூலம் தலா1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மின்சாரம் கிடைத்து வருகிறது இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி முதலாவது அணு உலை நீராவி இன்ஜின் பழுதடைந்ததால் திடீரென உற்பத்தி நிறுத்தப்பட்டது ,இந்தியா மற்றும் ரஷ்யநாட்டின் விஞ்ஞானிகள் பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு மீண்டும் முதலாவது அணு உலை பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தியை துவக்கியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக் 22ஆம் தேதி முதல் மற்றும் 2ஆவது அணு உலை இயக்கப்பட்டு 700 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

தற்போது 2 அணு உலைகளும் இயக்கப்பட்டு வருவதால் விரைவில்தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுஉலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மற்றும் 4ஆவது அணு உலைகளின் கான்கீரிட் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.