திருநெல்வேலி, ஜூன் 3- தென்காசி மாவட்டத்தில் செவ்வா யன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. குணமா னோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள் ளது. தென்காசி மாவட்டத்தில் திங்கள் வரை 88 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். 201 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர் களில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இவ்விரு வரும் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந் துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் மருத்துவமனையில் இருந்து பூரண குணமாகி இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் ஆகியோர் எண் ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. தற் போது 13 பேர் மட்டும் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.