tamilnadu

img

பாஜக அரசின் மாணவர் விரோத கல்விக்கொள்கை குறித்து இன்று காணொலிக் கருத்தரங்கம்... ஆசிரியர் அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது

திருநெல்வேலி:
தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஐ நாட்டின் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற த்தில் கூட விவாதம் நடத்தாமல், அமைச்சரவை முடிவாக அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் கெடு வாய்ப்பாக வந்துள்ள கொரோனா பெருந்தொற்று, மத்திய ஆட்சியாளர்களுக்கு கல்விக்கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்திடக் கிடைத்திட்ட நல் வாய்ப்பாக அமைந்து விட்டது துரதிர்ஷ்டமானது ஆகும். மத்திய அரசு அறிவித்துள்ள தேசியக்கல்விக்கொள்கை-2020 குறித்து பொது விவாதம் நடத்தவும் அதில் உள்ள மக்கள் விரோத அம்சங்களை அனைத்துப்பகுதி மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 7 அன்று மாலை 05.30 மணிக்கு காணொலிக் கருத்தரங்கம்’  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் துவக்கவுரையாற்றுகிறார். மைசூரு ஜேஎஸ்எஸ்எஸ்டி பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ஜவஹர் நேசன் “தேசியக்கல்விக்கொள்கை-2020 யும் உயர்கல்வி யும்” என்ற தலைப்பிலும் சென்னை அறிவியல் கணித நிருவனத்தின் பேராசிரியர்ஆர்.இராமானூஜம் “தேசியக்கல்விக் கொள்கை-2020 யும் பள்ளிக்கல்வியும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றவுள்ளனர். 

இக்காணொலிக் கருத்தரங்கத்தினை அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO), இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. Webinar link:https://youtu.be/2BNg4G2OHpYAttachment: Webinar poster