திருநெல்வேலி, ஜூன் 14- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட்டாலூர் பகுதியில் சட்ட விரோதமாக எரிபொருள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றதில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு விற்பனையில் ஈடுபட்ட பாபநாசம் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். அவர்களிடம் இருந்து 90 லிட்டர் வாகன எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.