tamilnadu

சென்னையில் இருந்து சடலத்துடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

தூத்துக்குடி , ஜூன் 7-  சென்னையில் இருந்து பசுவந்தனைக்கு சடலத்துடன் வந்த 3  பேரை சோத னைச்சாவடியில் அதிகாரிகள் சனிக்கிழமை  தடுத்து நிறுத்தினர். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த  65  வயதுடைய ஆண் ஒருவர் மாரடைப்பால் மர ணமடைந்ததால் அவரது சடலத்தை ஆம்பு லன்ஸில் அங்கிருந்து அவரது மனைவி  மற்றும் அவரது உறவினர்கள் என 3  பேரு டன் பசுவந்தனையை அடுத்த செவல்பட்டி நோக்கி எந்தவித அனுமதியுமின்றி (இ-பாஸ் இல்லாமல்)  சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எல்லையான தோட்டிலோவன்பட்டி சோத னைச்சாவடியில் போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, வருவாய் துறை உதவி யாளர் பொன்னம்மாள்,  வட்ட சார்பு ஆய்வா ளர் பிரியதர்ஷினி, காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில்வேல், சுகாதாரத் துறை  அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்  தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கோவில் பட்டியில் உள்ள மயானத்தில் அந்த முதிய வரின் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. பின்னர்  அவர்களுடன் வந்த 3  பெண்களும் கோவில் பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுடைய ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுக்க சுகா தாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.