தூத்துக்குடி,ஜூலை 9- திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவல கம் முன்பு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நிர்வாக உதவியா ளர் ஜஸ்டின் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய ஆகியவற்றின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் புதனன்று நடைபெற்றது.நெல்லை தலைமை பொறியாளர் தலையிட்டு திருச்செந்தூர் பொறுப்பு செயற்பொறியாளர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஜஸ்டின் மீது இரண்டு தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பது என உறுதி கூறிய தால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சிஐடியு சார்பில் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது :- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டிஏஎன்ஜிஇடிசிஒ செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக பணி புரியக்கூடிய பெண்ணு க்கு அவரது மேல் அதிகாரியான உதவி நிர்வாக அலுவலர் ஜஸ்டின் ஆரோன் என்பவர் பணிக்கு சேர்ந்த நாள் முதல் தொடர்ந்து உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.கடந்த 11.03.2020 அன்று அத்துமீறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண்மணி 19.03.2020 அன்று திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்து புகார் மனு எண் : 214/2020 நாள் 19.03.2020 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து ஜஸ்டின் ஆரான் காவல்நிலையத்தில் ஆஜராகி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அப்பெண்மணியை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் மின் வாரிய அலுவலகத்தில் பணியிட மாற்றம் செய்துள்ளார். 23.03.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரை நேரில் சந்தித்து மேல்முறையீடு மனுவை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசார ணை அதிகாரியாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்து எப்.ஐ.ஆர் எண் 13 நாள் 22.06.2020 ஐபிசி 354 (ஏ) (1) (iv) பிரி வுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆய்வாளர் பிரேமா அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் இப்பிரச்சனையை இத்துடன் விட்டுவிடு, ஆரோனை எனக்கு தெரியும் நான் கண்டித்து வைக்கிறேன், தேவையில்லாமல் வேலையை விட்டுவிட்டு கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையாதே என்று குற்றவாளிக்கு ஆதரவான நிலையில் பேசியுள்ளார். 19.03.2020 அன்றே திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் அதன் மீது சட்டப்படி யான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி காவல் கண்காணிப்பாளர் தலையீடு செய்த பின்னரும் எப்ஐ ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களுக்கு மாறாக உள்நோ க்கத்தோடு குற்றவாளிக்கு ஆதரவான மன நிலையில் ஐபிசி354 (1) ல் (iv) ன் பிரிவின் படி மட்டும் வழக்கு பதிவு செய்துள்ள திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை நியாயமற்றது.
மேற்கண்ட எப்ஐ ஆரில் ஐபிசி354 (1) ல் (i), (ii) ஆகிய குற்றப்பிரிவு களை இணைத்திட வேண்டும், இது போன்ற வழக்குகளில் ஆதாரத்தை கொண்டு வா என்று புகார் கொடுத்தவரை துன் புறுத்துவது சரியல்ல, ஆகவே ஆய்வாளர் அவர்களுக்கு இவ்வழக்கில் புகார்தாரரிடம் ஆதாரத்தை அளிக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் புகார் கொடுத்துள்ள பெண்மணிக்கு மேலதி காரி என்பதால் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் திருச்செந்தூர் செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் குன்னிமலை யான், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமயில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மண்டல செயலா ளர் பீர் முகமது ஷா, சிஐடியு மாவட்டதலைவர் இரா. பேச்சி முத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச்செயலாளர் எஸ்.அப்பாத்துரை, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.முனியசாமி, எம்.முருகன், எஸ்.மாரியப்பன், கணபதி சுரேஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டசெயலாளர் எம்.ராமையா, பொருளாளர் யோவான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார், மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் மரியதாஸ், தமிழ்ச்செல்வன், கணேசன், பெருமாள், நெல்சன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் ராம லட்சுமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் வைணப்பெரு மாள், சிவதானுதாஸ், இசக்கியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.