தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடி மாவட்டத் தில் ஜூன் 15 வரை 426 பேர் கொரோனா தொற்று நோ யினால் பாதிக்கப்பட்டுள் ளார்கள். மகாராஷ்டிரா, குஜ ராத் போன்ற வெளிமாநில நபர்கள் 190 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் சென்னை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்கள் சோதனைச்சா வடியில் கண்டறியப்பட்டு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உள்ள நபர்களுக்கு அரசு மருத்து வமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த 85 பே ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நபர்களுடன் தொ டர்பில் உள்ள 50 பேருக்கும், அவர்களது குடும்பத்தின ருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்க ளின் பயண விவரங்கள், அவர்களுடன் தொடர்பு டைய நபர்களும் கண்டறி யப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பிற மண்டலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்கள் முறையாக இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை கண்காணிக்க சோதனைச்சா வடிகளில் பணியில் ஈடு படும் அலுவலர்களுக்கு அறி வுரைகள் வழங்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர மாக மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி தலை வர்கள் தலைமையில் குழுக் கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் சரி யான முறையில் கையாள்வ தால் நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என தெரிவித்தார்.