tamilnadu

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தூத்துக்குடி விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி, ஜூன் 14- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிர தம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2020 காரீப்  பருவ பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார். திருந்திய பிரதம மந்திரி  பயிர் காப்பீட்டுத் திட்டம் விவ சாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி யுதவி வழங்கி பாதுகாக்க வும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும்  அதிநவீன தொழில்நுட்ப ங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்ப டுத்தப்படுகிறது.  2020-21 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் காரீப் பருவ பயிர்களை திருந்திய பிரதம  மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், 501 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்தி ட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெய ரில் கடன் பெறும் வங்கிகளில்  பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

 கடன்பெறா விவசாயி கள், தூத்துக்குடி மாவட்ட த்தில் இத்திட்டத்தை செயல்ப டுத்தும் காப்பீட்டு நிறுவ னத்தின் (அக்ரிகல்சர் இன்சூ ரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா  லிமிடெட்) அங்கீக ரிக்கப்பட்ட முகவர்கள் மூல மாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்கள்  மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு பரு வத்தில் உளுந்து, நிலக்க டலை, பருத்தி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள்  31 ஜுலை 2020ம், தோட்ட க்கலை பயிர்களான வாழை க்கு ஆகஸ்ட் 31-ம், வெங்கா யம், மிளகாய் மற்றும் வெண்டைக்கு ஜுலை 31-ம் பதிவு செய்ய கடைசி நாள்  ஆகும்.  எல்லா விவசா யிகளும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ண ப்பங்கள்  விடுபடாமல் இரு க்கவும், திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையைக் காலத்தே செலுத்தி தங்களது பயிர்க ளை முன்கூட்டியே பதிவு  செய்ய கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

 பயிர் காப்பீட்டு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.565ம், இதர காரீப் பருவ  பயிர்களான உளுந்து பயி ருக்கு ரூ.256-ம், நிலக்கடலை  பயிருக்கு ரூ.326-ம். பருத்தி பயிருக்கு ரூ.480ம், வெங்காயம் பயிருக்கு ரூ.945-ம், வாழை பயிருக்கு ரூ.2617-ம், வெண்டை பயி ருக்கு ரூ.798 மற்றும் மிள காய் பயிருக்கு ரூ.1089ம் காப்பீட்டுக் கட்டணமாக செ லுத்தினால் போதுமானது.  விவசாயிகள் இத்தி ட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின்  முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.