தூத்துக்குடி, ஜூன் 13- தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலை மையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டி டத்தினை திறந்து வைத்தார். மேலும் 568 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.