districts

img

நெடுவாசலில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

மயிலாடுதுறை, மார்ச்.10-  மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேத மடைந்து பழுதடைந்துள்ள நிலையில் அச்சத்திலேயே சிறு குழந்தைகள் பள்ளி வந்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.  நெடுவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரு கின்றனர். நெடுவாசல், செருகடம்பனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை,எளிய குடும்பங்களின் குழந்தை கள் பயிலும் இப்பள்ளி கட்டிடத்தின் சுவர் பெயர்ந்தும் விரிசல் விட்டும் இருக்கிறது.  பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தின் மேற்புற காரைகள் விழுந்தும், மழை பொழியும் காலங்களில் நீர்கசிந்தும் வருவதால் குழந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நீர் ஒழுகும் கட்டிடத்திலேயே பல ஆண்டுகளாக செயல்படும் பாழடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.