tamilnadu

தகராறில் போலீஸ்காரர் பலி: கொலை வழக்கு பதிவு

தூத்துக்குடி, ஜூன் 10- தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காய மடைந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு  பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர், தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியி ருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி மகன் புங்க லிங்கம் (34). இவர் தூத்துக்குடி மத்தியபா கம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்தார். திங்களன்று  தூத்துக்குடி -  பாளை ரோட்டில் உள்ள எம்ஜிஆர் பூங்கா  அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும் பூங்கா காவலாளியாக பணிபுரியும் மறவன்மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வம் (44) என்ப வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள் ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம்,  போலீஸ்காரர் புங்கலிங்கத்தை சராமாரி யாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது  செய்தார். இந்நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புங்க லிங்கம், சிகிச்சை பலனின்றி புதனன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.