tamilnadu

img

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய பைபர் படகு திடீர் பரபரப்பு

 தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடி அருகே வைப்பாரில் பைபர் படகு திடீரென கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடலோர காவல்துறையினரும் கடற்கரையோரம் மற்றும் கடற்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவில்கள், மசூதிகள், சர்ச்களிலும் சோதனை நடக்கி றது. ரயில் நிலையங்களிலும் பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக குளத்தூர் போலீசிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று படகை சோதனையிட்டனர். அந்த படகு தூத்துக்குடியை சேர்ந்த பிரபல உப்பள அதி பருக்கு சொந்தமானது எனவும் அவருக்கு வைப்பார் பகுதியில் ஏராளமான உப்பளங்கள் இருப்பதால் மாலை வேளையில் கடற்கரையில் சாகச விளையாட்டுக்காக படகுகள் உள்ளிட்டவை வாங்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதில் கட்டி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு காற்றின் வேகத்தில் கயிறு அறுந்து சுமார் 1மைல் தூரத்தில் கரை ஒதுங்கியது தெரிய வந்தது.உடனே உப்பள அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் படகுக்கான உரிய ஆவ ணங்களை போலீசாரிடம் காட்டி தனது படகை மீட்டு சென் றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி யது.