tamilnadu

img

பாலியல் துன்புறுத்தலால் சிறுமி தீக்குளிப்பு காப்பீட்டு ஊழியர்கள் நிவாரண உதவி

தூத்துக்குடி, மே 23- தூத்துக்குடியில் பாலியல் தொல்லை யால் தீக்குளித்து அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில்  நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புளியங்கு ளம் பகுதியில் காதலிப்பதாக ஏமாற்றி  தான் கூப்பிடும் இடத்திற்கு வரச்சொல்லி  மிரட்டியதால் பயந்து தற்கொலைக்கு முயன்ற 17 வயது சிறுமி மிகக் கடுமை யான தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் உள்ளிட்டோர் நேரடியாக சென்று  பார்த்தனர். காப்பீட்டு கழக ஊழியர்  சங்கத்தினர் நேரில் சென்று பார்வை யிட்டு, மருத்துவ செலவினங்களுக்கான உதவிகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

சிறுமியின் பெற்றோர்கள் இருவ ரும் உப்பளத்தில் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். ஏழ்மையான குடும்பம். எனவே மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எளிய பங்க ளிப்பாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் அர்ச்சுனன், மாதர் சங்க மா வட்டச் செயலாளர் பூமயில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் மதுபால், முத்துக்குமாரசுவாமி, முருகன், சீனி வாசன், சிவராமகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் விளாத்திகுளம் ஒன்றிய செயலா ளர் புவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.