தூத்துக்குடி, ஆக.8- சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளம் ஊராட்சி துவர்குளம் விலக்கில் தனி யார் குவாரி செயல்பட்டு வருகிறது. இக்குவா ரியில் அதிவேக வெடி வெடிப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதுடன், அருகில் உள்ள விளைச்சல் நிலங்களும் பாதிப்புக்குள்ளாவதாகவும், குவாரியில் உள்ள பாறைகள், கற்களை ஏற்றி செல்லும் லாரிகள் விதிமுறைகளை மீறி பாரங்களை ஏற்றி செல்வதாகவும், அதனால் விபத்து நிகழ்வதுடன் சாலைகளும் சேதமாகி உள்ளதாக சாத்தான்குளம் ஒன்றி யக்குழு திமுக உறுப்பினர் ப்ரெனிலாகார்மல் போனிபாஸ் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சாத்தான்குள்ம வட்டாட்சியர் ம.ராஜலட்சுமி, கல்குவாரி நிறுவனத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, கொம்பன்குளம் கிராமத்தில் உள்ள கல்குவா ரிக்கு அரசு வழங்கிய அனுமதி முடிவுற்றது. மேலும் குவாரியில் உள்ள கனிமங்கள் இருப்பு உள்ளதை அகற்ற கால அவகாசம் நீட்டித்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைபொருட்டு குவாரியில் புதியதாக வெடி பொருள்கள் பயன்படுத்தி குவாரி செய்யக்கூடாது, அனுமதியளிக்கப்பட்ட அளவு மட்டுமே லாரிகளில் பாரம் ஏற்றி செல்ல வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குவாரியில் மீதமுள்ள கல் மற்றும் சரள் ஆகியவற்றை அகற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.