tamilnadu

அம்மன்புரத்தில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடத்திற்கு அடிக்கல்

தூத்துக்குடி,ஜூலை 2- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றி யம் அம்மன்புரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப் பட உள்ள சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் ஜூலை 2 ல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கட்டடத்தி ற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். விரைவில் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 ஊராட்சி களில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடத்திற்கான பணிகள் துவக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரி வித்தார்.