tamilnadu

img

சூறைக்காற்றில் வாழைப் பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை; நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடி, மே 20- திங்களன்று வீசிய சூறைக் காற்றினால் தூத்துக் குடி, திருவைகுண்டம் மற்றும் ஏரல் வட்டங்களில் பல லட்சம் ரூபாய் பெறு மான வாழைப் பயிர்கள் சேத மடைந்தன. இதனையறிந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. எஸ்.அர்ச்சுனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக் குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், துணைத் தலைவர் தி.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கட்சி திருவை குண்டம் ஒன்றியச் செயலா ளர் நம்பிராஜன், சேர்வைக் காரன்மடம் பாசன விவசாய சங்க தலைவர் பொன்ராஜ், சாயர்புரம் சிபிஎம் செயலா ளர் சுவாமிதாஸ் ஆகியோர்  அடங்கிய குழு செவ்வா யன்று அப்பகுதிகளுக்கு நே ரில் சென்று ஆய்வு செய்தனர்.  

திருவைகுண்டம் வட கால் பாசனப் பகுதிகளில் வரும் பேய்க்குளம், பொட் டைக்குளம், அத்திமரப்படடி, கோரம்பள்ளம், கொற்கை, ஆறுமுகமங்கலம், மாரமங்க லம், உமரிக்காடு, முக்காணி,  ஏரல் மணக்காடு, கோவங் காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சாயர்புரம், கொ டுங்கணி, வீரநாயக்கன்தட்டு, அய்யனடைப்பு, காலாங் கரை பகுதிகளில் பல லட்சம்  ரூபாய் பெறுமான வாழைகள் சேதமடைந்துள்ளதை கண்டறிந்தனர். புதனன்று விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலை மையில் விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் மாவட்ட ஆட்சிய ரை நேரில் சந்தித்து சூறைக் காற்றினால் வாழை விவசா யிகளுக்கு ஏற்பட்டுள்ள சேத  விபரங்களை விவரித்தனர்.

ஏற்கனவே கொரோனா ஊடரங்கால் வாழைத்தார் களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல் பழங்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது விவ சாயிகளுக்கு பெரும் துய ரத்தை அளித்துள்ளது. ஒரு ஏக்கரில் வாழை பயி ரிட ஏறக்குறைய ஒரு லட்சம்  ரூபாய் வரை செலவு ஏற்ப டும். எனவே வருவாய்த்துறை மூலம் உடனடியாக கணக் கீடு செய்து வாழை விவசா யிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினர்.