தூத்துக்குடி, ஆக.26- தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை ஊக்கு விக்கும் நோக்கத்தில் தமிழக அரசு www.tnprivatejobs. tn.gov.in/ என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை பெற விரும்பும் வேலை நாடுநர்கள் தங்களது விவரம் ஆகியவற்றை எந்த வித கட்டணமும் இன்றி பதிவு செய்து வேலை வாய்ப்பு பெறலாம். தனியார் நிறுவ னங்கள் தங்களது நிறுவன பணி காலியிடங்க ளை இந்த இணையதளத் தில் பதிவு செய்யலாம். தனியார் நிறுவனங்களில் பணி பெறுபவர் களின் வேலைவாய்ப்பு அலு வலகப் பதிவு ரத்தாகாது என ஆட்சியர்தெரிவித்துள்ளார்.