தூத்துக்குடி,ஜூன் 7- தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத் தீவில் இருந்து கப்பலில் வந்த 700 பயணிகளை துறை முக பொறுப்புக் கழக தலை வர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் வர வேற்று சொந்த மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு உள்ளது. சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள், ஊர டங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ‘வந்தே பாரத்‘ இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, கடந்த 2-ம் தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்களுடன் கடற் படை கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. தற்போது 2-வது கட்டமாக மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். பய ணிகளை துறைமுக பொறுப் புக் கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் வரவேற்றனர். இதில் 45 பெண்கள் உட்பட 700 பேர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தெலங் கானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர், கொச்சியைச் சேர்ந்த 5 பேரும் வந்துள்ளனர். முன்னதாக பயணி களுக்கு கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு அந்தந்த மாவட்டங்களுக்கு 22 பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.