திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏகோரிய தலைமை செயலகசி.சி.டி.வி காட்சிகளை வழங்குவதற்கான தயாரிப்புகள் முழுமை அடைவதற்குள் மலையாள மனோரமா நாளிதழும், தொலைக்காட்சியும் மீண்டும் ஒரு தவறான கதையுடன் பொய் பிரச்சாரத்தை நடத்தின.
கேமராவில் சொப்னாவின் படம் பதிவாகி உள்ளது, எனவே அந்த காட்சிகளை என்ஐஏவுக்கு கொடுக்க வேண்டியதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது என்பதே அந்த கதை. உண்மை என்னவெனில், தலைமைச் செயலகத்தில் 82 கேமராக்களில் இருந்து ஒரு வருட காட்சிகளை துல்லியமாகப் பிடிக்க அரசாங்கம் சிறப்பு வன்பொருள் அமைத்து வருகிறது. ரூ.1.40 கோடி செலவாகும் திட்டத்திற் கான கோப்பை நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் பரிசீலித்து வருகின்றன. ஒப்புதல் கிடைத்த உடன்இந்த காட்சிகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படும்.
கட்டுப்பாட்டு அறைக்குள் ஊழியர்களைத் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை என்பதாக ஒரு கதையும் உள்ளது. சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறை எப்போதும் ரகசியமான இடமாகும். அங்கு எல்லோரும் அனுமதிக்கப்படுவதில்லை. என்ஐஏ கோருவது ஒரு கேமராவில் ஒரு குறிப்பட்ட நேரக்காட்சி மட்டுமல்ல. 2019 ஜூலை 1, முதல் 2020 ஜூலை 12 வரையிலான முழு கேமரா பதிவுகள். இவை அதற்குரிய முறையில் நகலெடுக்கப்பட வேண்டும். எனவே,சாதாரண நகலெடுப்பது சாத்தியமில்லை. அதனால் தான் சிறப்பு வன்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட உடன் அப்படியே அதன் நகல்கள்என்ஐஏயிடம் வழங்கப்படும். ஜூலை 16 ஆம் தேதி, என்ஐஏ இந்த காட்சிகளைக் கோரி ஒரு கடிதத்தை அளித் தது. எத்தனை நாட்களுக்குள் அந்த காட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.