tamilnadu

img

நிவாரண அரிசியில் செத்துப்போன எலி

திருவள்ளூர், மே 1- பொன்னேரி பேரூராட்சியில் வசிக்கும் பாலாஜி என்பவருக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண அரிசியில் செத்துப் போன எலி இருந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தடுப்பு பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ள கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரண  உதவி ரூ 1,000 மற்றும் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட நிவார ணப் பொருள் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களில் அரிசி  தரமற்றதாக உள்ளதாக பல்வேறு பகுதியில் தொழிலா ளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் வியாழனன்று (ஏப். 30) பொன்னேரி பேரூ ராட்சியில் வசிக்கும் பாலாஜி எலக்ட்ரீசியன் என்பவருக்கு பொன்னேரி விஏஓ அலுவல கத்தில் நிவாரண பொருட்கள்  வழங்கப் பட்டது.

வீட்டிற்கு சென்று நிவாரண பையை  அவர்  பிரித்து பார்த்தபோது அரிசியில் எலி  செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி  அடைந்தார். அரிசி முழுவதும் எலியின் முடி யும் கழிவுப் பொருட்களும் இருந்துள்ளது. வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அரசின் நிவாரண உதவியை எதிர்பார்த்து கிடக்கும் இந்த நேரத்தில் தொழிலாளர்களுக்கு சுகா தாரமற்ற முறையில் பொருட்கள் வழங்கு வது மிகவும் கவலைக்குறியதாக உள்ளது.

கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில்  எலி  செத்த அரிசி வழங்குவது மேலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் புதிய நோய்தோற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொருட்களை சுகாதாரமற்ற முறையில்  பார்சல் செய்து கவனக்குறைவாக  இருந்தவர்கள்  மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்கவும் தற்போது வழங்கியுள்ள பார்சல்களை திரும்பப் பெற்று தரமான அரிசி உள்ளிட்ட பொருட்களை தொழி லாளர்களுக்கு வழங்கிடவும் தாங்கள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்ட குழுவின் சார்பில்  கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.