தேனி, மார்ச் 1- பெரியகுளம் அருகே கைலாசபட்டி பெரியார் தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி மகன் சிவ ஜெய்சிங் ( 21).கஞ்சா விற்பதாக கிடைத்த தக வலை அடுத்து தென்கரை காவல்நிலைய சார்பு ஆய்வளர் அசோக் தலை மையில் ரோந்து சென்றனர் .அப்போது இவர் அங்கு பேருந்து நிறுத்த பகுதி யில் 5 கிலோ கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். போலீசார், இவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல தேனி அருகே கோடாங்கிபட்டி மனித நேய காப்பகம் பக்கத்தில் உள்ள முள் புதரில் அதே ஊரைச்சேர்ந்த சிவனாண்டி மகன் முருகேசன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார் .அப்போது வந்த பழனிசெட்டிபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் யாழிசைசெல்வன் தலைமையிலான காவல்துறையினர் அவரை கைது செய்து ,1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.