tamilnadu

நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு: தர்மபுரி இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க தேனி சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் உதித்சூர்யா தந்தை ஜாமீன் கோரி மனு

தேனி, அக்.3-  நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சேலம் சிறையில் உள்ள தர்மபுரி மருத்துவ கல்லூரியில் படித்த இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதி மன்றத்தில் சிபிசிஐடி காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சென்னை மாணவர் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்க டேசனுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி யில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற சென்னை மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதில், மருத்துவர் வெங்கடேசனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது சார்பில் தேனி மாவட்ட குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பன்னீர்செல்வம் விடுப்பில் இருந்த தால், இந்த மனு தேனி விரைவு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது, இந்த மனுவின் மீது அக்டோ பர் 9ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஜி.ரூபானா தெரி வித்தார். மேலும், நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி தேனி மாவட்ட சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மாணவர்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, வெள்ளிக்கிழமை(அக்.4) மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி தெரிவித்தார்.
சிபிசிஐடி மனு
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்பானை காவ லில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, தேனி விரைவு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தேவி சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. சேலம் நீதிமன்றத்தில் இருந்து இர்பான் வழக்கு தொடர்பான ஆவ ணங்கள் வந்து சேர்ந்த பின்பு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.