tamilnadu

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி:
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். வைகை அணை நீர் பிடிப்புப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் அணைக்கு 1,323 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 972 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 60.20 அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியாக உள்ளது. 72 கன அடிநீர் வருகிற நிலையில் 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.60 அடி. 79 கன அடி நீர்வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப் பாறை அணையின் நீர் மட்டம் 81.50 அடி. வருகிற மூன்று கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.மழையளவு (மில்லிமீட்டரில்): பெரியாறு- 10.8, தேக்கடி- 12.2, கூடலூர்- 14, சண்முகா நதி அணை- 7, உத்தமபாளையம்- 3.2, வீரபாண்டி- 6, வைகை அணை- 0.4, கொடைக்கானல்- 9.8 மி.மீ.