தேனி, மார்ச் 21- முல்லைப்பெரியாறு, வைகை நீர்மட்டம் குறைந்து வருவ தால் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. சனிக்கிழமை காலை ஆறு மணி நிலவரப்படி முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 114.95அடியாக உள்ளது. வரத்து இல்லை. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 47.36 அடியாக குறைந்துள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.65 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.28 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. தேனி மாவட்டத்தில் வெயி லின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப டுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.